மேலதிக கேள்விகள்

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

ஆண் இனப்பெருக்கத் தொகுதி.

வினா: விதைகளில் வீக்கம் எற்பட காரணம் என்ன?

விடை: இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்

  1. Hydrocoel- விதையை சூழ திரவம் சேர்த்தல்.
  2. Hernia
  3. யானைக்கால் நோயின் ஒர் பக்க விளைவு.

இவற்றுக்கு வைத்திய ஆலோசனை நாடவும்.

வினா: இரவு நேர வெளியேற்றம் என்றால் என்ன ? இது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

விடை: சுயமாக சுக்கில பாய்பொருள் தூக்கத்தின் போது வெளியேறுவதே இரவுநேர வெளியேற்றம். இவ்வயதில் இது பொதுவானது என்பதால் பயப்படவேண்டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

வினா: முன் தோலை பிற்செலுத்த முடியாவிடின் என்ன செய்ய வேண்டும்?

விடை: இதற்கு வைத்திய ஆலோசனை நாடவேண்டும். ஒரு சத்திரசிகிச்சை தேவைப்படலாம் இதன்போது முன் தோல் அகற்றப்படும்.

வினா: முன் தோல் பிற்செலுத்த முடியாவிடின் தாம்பத்திய சுகம் குறையுமா?

விடை: முன் தோலை பிற்சொலுத்த முடியாவிடின், உடலுறவின் போது, அது வலியை ஏற்படுத்தலாம். இது தாம்பத்திய சுகத்தை குறைக்கலாம்.

வினா: ஆண்குறியில் புண்கள் ஏற்பட்டால் அது பயப்படவேண்டிய் விடயாமா?

விடை: இவ்வாறான புணகள் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, வைத்திய ஆலோசனை நாடுதல் ஏற்றது.

வினா: குறுகிய ஆண்குறிகள் தாம்பத்திய சுகத்தை குறைக்குமா?

விடை: இது ஆண்காளாலும் பெண்களாலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு மூடநம்பிக்கை. ஆண்குறியின் நீளம்
இன்பம் பெறுவதில் பிரச்சினை ஏற்படுவதில்லை

வினா: ஆண்குறி நீளாததற்கான காரணங்கள் என்ன?

விடை: இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினையாகும். எனினும் நீரிழிவு நோய் அதிகளவிலான மது பாவனை, மற்றும் புகைத்தல் இப்பிரச்சினையை  தரலாம். நீணட கால மருந்து பாவனையும் இப்பிரச்சினையை  தரலாம்.

வினா: முஸ்லிம் ஆண்களால் பேணப்படும் சம்பிரதாயமான் ‘முன்தோல் அகற்றல்’ – தொடர்பான விஞ்ஞான விளக்கம் என்ன?

விடை முந்தோல் அகற்றல், ஒரு சிறிய சத்திர சிகிச்சை. இது ஒரு ஆணுறுப்பு பகுதியில் சுத்தததை பேணும். இது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒர் மத சம்பிரதாயமாகும்.

வினா: முன் வெளியேற்றம்(  premature ejaculation) என்றால் என்ன?

விடை: உடலுறவின் போது, சுக்கில பாய்பொருள், எதிர்பார்த்த நேரத்திற்கு முன் வெளியாகுமெனின் அது முன் வெளியேற்றம் என கருதப்படும். இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினை ஆகும். ஆனாலும் சில வேலைகளில் . இது வேறு காரணங்களாலும் ஏற்படலாம். எனவே, இவ்வாறான பிரச்சினைக்கு, வைத்திய ஆலோசனை நாடுவது உகந்ததாகும்.

பெண் இனப்பெருக்க தொகுதி (Female Reproduction system)

வினா: யோனி வெளியேற்றம் எப்போதும் ஒரு நோயின் அறிகுறியா?

விடை: இல்லை. இது பொதுவாக, ஓமோன் மாற்றங்கள் எற்படுவதனால் பூப்படையும் காலத்தின் பின் பெண்களில் ஏற்படலாம். அது நிறாமோ, மணமோ அற்ற  ஒரு திரவமாக, யோனிமடல்களில் அரிப்பும் காணப்படாது. இது ஒரு நோயல்ல. மற்றும் இது உடல் பருமனில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

யோனி வெளியேற்றம்- மணம் கொண்டதாகவோ, நிறாமாற்றாமடைந்தாகவோ, யோனிமடல் அரிப்புடனும் காணப்படின் வைத்திய ஆலோசனை நாடவேண்டும்.

வினா: கருப்பை கழுத்தில் புற்றுநோயை முற்கூட்டி அறியலாமா?

விடை: ஆம், இதற்கு PAP பரிசோதனை ஒன்று செய்யப்படும. இதனால், புற்றுநோயாக மாறக்கூடிய கலங்கள் கண்டுபிடிக்கபடும். இதனால், வைத்தியர் முன் எச்சிரிக்கைகள் எடுத்து, புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

வினா: உடல் பருமன் அதிகாமாயிருந்தால் குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா?

விடை: ஆம், உடல் பருமன் அதிகமாயிருந்தால் குழந்தை பேற்றை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வினா: இரண்டு மாதவிடாய் சக்கரங்களுக்கு இடையில் வயிற்று வலி வர காரணம் என்ன?

விடை: பொதுவாக சக்கரத்தின் 14 ம் நாள் முட்டை வெளியேற்றம் எற்படும். இது சில வேளைகளில் பலி எற்படுத்தும்.

வினா: பூப்படையும் வயதில் வேறுபாடு காணப்படுவது ஏன்?

விடை: இது பிறப்புரிமை ரீதியான ஒரு விடயமாகும். உடலிலுள்ள இலிங்க  ஒமோன்களின் அளவும் இதனை தீர்மானிக்கும். எனவே, இந்த ஓமோன்கள் சுரப்பதில் தாமதம் எற்பட்டால் பூப்படையும் வயதும் பின் தள்ளப்படும். பொதுவாக ஒரு பெண் பூப்படையும் வயது 11-13 . இது 17 வயதிலும் அதிகமாகும் எனின் ஒரு வைத்தியரை நாடவேண்டும்.

வினா: தாடி சரியாக வளராததற்கு காரணம் என்ன?

விடை: இது ஆண்களில் ஒரு துணை இலிங்க இலட்ச்சணம் ஆகும். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் எனவே, இதை பற்றி கவலைப்படவேண்டாம்.

வினா: மார்பகங்களின் பருமன்ன அதிகரிக்க சிகிச்சை முறைகள் உண்டா?

விடை:மார்பகங்களின் அளவு பிறப்பின் போது தீர்மனிக்கப்படுவது ஆகும்.  இதன் பருமனை அதிகரிக்க வில்லைகளோ பூச்சுக்ளோ இல்லை. மார்பகங்களின் அளவு தாம்பத்திய  வாழ்க்கையையோ, பாலுட்டலையோ பாதிக்காது.

வினா: பூப்படைந்த பின், அடுத்த மாதவிடாய் தாமதாமாக காரணம் என்ன?

விடை: பூப்படைந்த பின், முட்டை வெளியேற்ற சீரடைய ஒரு சிறிய காலம் தேவைப்படும்.

வினா: சீரற்ற மாதவிடாய்க்கான காரணங்கள் என்ன?

விடை: மாதவிடாய் இலிங்க ஒமோன்களில் எற்படும். இது சீரற்ற போவதற்கான காரணங்கள்..

  • மன உளைச்சல்
  • நீண்ட கால நோய்.
  • காலநிலை மாற்றம்
  • ஒமோன் மாற்றங்கள் ( இலிங்க ஓமோன்கள், தைரொயிட்டு ஒமோன்கள்)
  • உடல் பருமனில் ஏற்படும் மாற்றாங்கள்( அதிகரிப்பு அல்லது குறைவு)

வினா: மாதாவிடாய் ஏற்படும் முதல் நாள் குளிக்கலாம்?

விடை: குளிப்பு பாதிப்பை எற்படுத்துவதற்கான  எந்த விஞ்ஞான ரீதியாலன் ஆதரமும் இல்லை. உடல் சுத்தம் பேணப்படுதல் முக்கியமாகும்,

வினா: மாதவிடாயின் போது, உடலுறவு கொள்ளுவது நல்லதா?

விடை:இது உங்களுக்கு வெறுப்பை தராவிடின் எந்த பிரச்சினையும் இல்லை.

வினா: அன்னாசி, பீற்றூட் போன்ற உணவுகளை மாதவிடாய் காலங்களில் தவிர்த்துக்கொள் வேண்டுமா

விடை:இல்லை, உணவுகளில் எந்த கட்டுபாடும் இல்லை.

வினா: மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி மற்று பிற்புறவலி சம்பந்தமாக என்ன  செய்யலாம்?

விடை: இது பயப்ட வேண்டிய விடயம் அல்ல,சுடுநீரால் தடவுதல் அல்லது பரசிடமோல் குடித்தல்- இவ்வலியை குறைக்கும்.

கன்னிதன்மை(Virginity)

வினா: முதல் உடலுறவின் போது கட்டாயமாக குருதிபெருக்கு ஏற்படவேண்டுமா?

விடை: இல்லை

வினா: முதல் உடலுறவின் போது ஒரு பெண்ணுக்கு குருதி பெருக்கு ஏற்படவில்லை எனில் அனள் கன்னி இல்லை எனப்து ஊர்ஜனமாகுமா?

விடை: இல்லை, சில பெண்கள் மென்சவ்வு இல்லாமல் பிறக்கும். சிலருக்கு அது தடிப்பமானதாக இருக்கும். எனவே, எனவே கன்னித்தன்மையை ஊர்ஜமாக்க குருதி பெருக்கு பார்ப்பது அவ்வளவு நம்பகரமான ஒரு விடயம் அல்ல.

தற்சுத்தமும் போசனையும் ( Personal hygiene and Nutrition)

வினா: இனப்பெருக்க உறுப்பு பகுதியில் புண்கள் வர காரணம் என்ன?

விடை: இவற்றை சூழ அதிகளவு மயிர்கள் காணப்படுவது ஒருகாரணமாகும். மற்றும்  இப்பகுதியில் வியர்வை அதிகம் என்பதால், நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். எனவே தற்சுத்தம் முக்கியமாகும்

தற்சுகம்(Masturbation)

வினா: தற்சுகம் தீங்கானதா?

விடை: இல்ல, இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு விடயமாகும்.

வினா: தற்சுகம் உடல் பருமனை குறைக்குமா? உடல் பலனை குறைக்குமா? தாம்பத்திய சுகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?
விடை : இல்லை

HIV/எயிட்ஸ்

வினா: எயிட்ஸ் நோய் ஏற்படுத்துவதை தவிர்த்துகொள்ள  தடுப்பு முறை மருந்துகள் (தடுப்பூசி) உண்டா?
விடை: இல்லை