எங்களை பற்றி

சமுதாயத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் பற்றிய அறிவு, விழிப்புணர்வினை அதிகரிப்பதே இதன் இலக்காக இருந்தது. பால் / பாலியல் கலந்துரையாடல் என்பது ஒதுக்கப்பட்ட விடயமாகப் பாக்கப்படுவதற்கு சமூக, கலாசார விழுமியங்கள் மற்றும் பழைய சந்ததிகளினால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. தகவல் தொழில்னுட்பத்தின் முன்னேற்றத்துடன், இளைஞர்களுக்கு பல்வேறு மூலங்களிலிருந்து அதிக நம்பிக்கையற்ற, தவறான வழிகாட்டல் ஏற்படுவதிலிருந்து பாலியல், இனப்பெருக்க சுகாதாரம் தொடார்பில் அதிக அளவான தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் அவார்களுக்குள்ளே இருக்கின்ற கேள்விகளுக்கு குடும்பத்திடம், நண்பர்களிடம், ஆசிரியர்களிடம் அல்லது குடும்ப மருத்துவரிடம் கூச்சம் காரணமாக கலந்துரையாட முடியாதவார்களாக இருக்கின்றனர் இது பாலியல் இனப்பெருக்க சுகாதார விடயங்கள் தொடர்பில் அவர்கள் தனித்துவிடப்படல், சந்தேகம் ஏற்படல் என்பவற்றை விளைவாக்கு கின்றது. மேலும், கருப்பொருளாக்கப்பட்ட சுகாதார முறையினால் இளம் நபர்களினால், திருமணமாகாதவர்களினால் எதிர் கொள்ளப்பட்ட விடயங்கள் போதியளவில் தெரிவிக்கப்பட வில்லை. கருத்திட்டத்தின் குறிக்கோள் சேவையாற்றப்படாத சமூகக் குழுக்கள் பாதுகாப்பான சூழலொன்றில் நம்பகரமான பாலியல் இனப்பெருக்க சுகாதார தகவல்களை அடையச் செய்வதனை அதிகரிப்பதாகும். தகவல் தொழினுட்பத்தை அடித்தளமாகப் பயன்படுத்தி, குடும்பத்திட்டமிடல் சங்கம், தொடர்பாடலுக்கு மும்மொழி தளமொன்றை உருவாக்கியுள்ள துடன், பாலியல் இனப்பெருக்க சுகாதார தகவல் மற்றும் ஆலோசனை சேவைகளைப் பரப்புகின்றது. கையடக்கத் தொலைபேசியின் ஊடுருவலினால் உயர் மட்டங்கள் மீது முதலீடு செய்யப்பட்டுள்ள கருத்திட்டம் தகவல் தொழில்னுட்பத் தொடர்பாடல் (ICT) அறிவினை (35% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது) நாட்டில் அதிகரித்தில் மற்றும் இணையத்தை அணுகுதல்/ தன்னாள் கணினிகள் நாடு முழுவதும் உட்புகுத்தப்படுகின்றது. தொலைபேசி அழைப்புஇ குறுஞ் செய்தி சேவைகள், இருவழி குரல் அழைப்புகள் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட இணைய நேரடி உரையாடல் / மின்னஞ்சல் மற்றும் கூட்டவைகள் உள்ளடங்கலான பல்லின தகவல் தொழில்னுட்பத் தொடர்பாடல் (ICT) சாதனங்கள் கருத்திட்டம் அனைவரையூம் அடையச் செய்வதற்காக இதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இத்தகவல்கள் / ஆலோசனை சேவைகள் தகைமை வாய்ந்த மருத்துவர்கள் / ஆலோசகர்களினாள் வழங்கப்படுகின்றன. தொடர்பாடல் பற்றிய ஆலோசனை மற்றும் இரகசியத் தன்மையை நாடுகின்றவர்களின் விபரங்களைத் தெரியப்படுத்தாமை உறுதி செய்யப்படுகின்றது.

பாலியல், இனப்பெருக்க சுகாதாரம் பற்றிய தகவல்கள் /அறிவினைப் பரப்புவதற்கான கருத்திட்டத்தின் நீண்ட நான்கு அணுகுமுறைகள்:
இருவழி குரல் பதிலளிப்பு முறைமை (IVR)
மகிழ்ச்சியான வாழ்க்கை இணையத்தளத்தை (Happy Life Website) பயன்படுத்தும் ஒருவர் தனிப்பட்ட தகவல் / ஆலோசனைகளுக்கு அழைப்பு நிலையத்திற்கு இணைப்பை ஏற்படுத்துமாறு கேட்க முடியும். அழைப்பவர்கள் பல்லின மொழி IVR முறைமையுடன் முறைமையை அடைவதற்கு நிலையான, கையடக்க அல்லது சிடிஎம்எ என்ற எந்தத் தொலைபேசியையும் பயன்படுத்த முடியும்.

குறுஞ்செய்தி நுழைவாயில் (SMS gateway)

முன்னரே வடிவமைக்கப்பட்ட குறியீட்டுடன் குறுஞ் செய்தியொன்றை அனுப்ப முடியும் என்பதுடன் குறித்த விடயம் தொடர்பான தகவலைப் பெறுவதற்கும் உதவி நிலையத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக குறித்த கேள்வியொன்றை அனுப்பவும், வேண்டப்பட்ட ஆலோசனை அல்லது மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இணைய வாயில்

இணையத்தளமனது, தளம், இணைய உரையாடல் அறைகள் / பயனிகள் குழுக்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு ஸ்கைப் / உரையாடல் வசதிகளுடன் நவீனமயப்பட்டள்ள தொழில்சார் / மருத்துவ உதவி போன்ற அத்தகைய குரல் /எழுத்தினடிப்படையிலான செய்திச் சேவைகள் மீதான தொடர்புகளிநூடாக பொதுவான தகவல்களை வழங்குகின்றது. மருத்துவ தொழில்சார்ந்தோருடன் பல்வேறு விடயங்களைக் கலந்துரையாடுவதற்கு, தனிப்பட்டவர்கள் ஒன்று சேருவதற்காக இணைய அளவையொன்று வழங்கப்படுகின்றது. மும்மொழி அஞ்சல் விண்ணப்பமொன்று உலகளாவியரீதியில் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அழைப்பு நிலையம்

அழைப்பு நிலையம் இரண்டு பிரதான செயற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. இது ஆர்வமுள்ள விடயம் தொடர்பில் தகவல்களை அழைப்பாளர்களுக்கு வழங்குவதுடன், தொலைபேசியினடிப்படையில் அமைந்த உசாவுகைச் சேவையினை வழங்குகின்றது.
தொழில்சார் மருத்துவர்கள், பயிற்றப்பட்ட ஆலோசகர்களினாள்
வைத்தியர்களினாள்/ ஆலோசனை வழங்கப்படுகின்றது. செலவு /சமூகத்தால் ஒதுக்கப்பட்டமை தொடர்பான அக அழுத்தமின்றி இணையத்தில் பாலியல், இனப்பெருக்க சுகாதாரத்தில் பொது மக்கள் ஈடுபடுவதனை ஊக்குவிப்பதற்காக இலவசமாக இந்த சேவை வழங்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டம் வயது, இனம், பால் போன்ற எந்த வேறுபாடுமின்றி இலங்கையர் அனைவரையும் சென்றடைகின்றது.

கருத்திட்டத்திற்கான இலக்குக்குழு

இந்த கருத்திட்டமானது, நம்பகரமான, சரியான பாலியல் இனப்பெருக்க சுகாதார தகவல் தேவைப்படுகின்ற விசேடமாக, இளம் நபர்களை மையப்படுத்தி திருமணமானவர்கள், திருமணமாகாத இரு சமூகங்களினது விடயம் ஒவ்வொன்றையும் இலக்காகக் கொள்கின்றது. சமூகர் கலாசார விழுமியங்கள், பாலியல், இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதை சமூகத்தில் ஒதுக்கப்பட்ட விடயமாக தொடர்ந்தும் பார்க்கின்றது. பெற்றௌருக்கும், பிள்ளைகளும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், கணவன் மனைவிக்கிடையிலான கலந்துரையாடல்கள் தர்மசங்கடமாவை. நவீன வாழ்க்கையின் அழுத்தங்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்வதற்கான செலவு என்பன பாலியல், இனப்பெருக்க சுகாதார வழிகாட்டல்களை தொழில்சார் நிபுணர்களிடமிருந்து பெறுவதற்கு மக்களைத் தடுப்பதுடன், விரிவு படுத்தப்பட்ட குடும்ப முறை குறைவடைதல் இளைஞர்கள் தனித்துவிடப்படுவதைக் காட்டுகின்றது. வயது வந்த இளைஞர்கள்ர் நண்பர்களிடமும்,சந்தேகத்திற்கிடமான மூலங்களிலிருந்தும் தகவலை நாடுவதற்கு தள்ளப்படுகின்றனார் தற்போதைய தொழில்வாய்ப்பு வடிவமைப்பு உண்மையான, நம்பிக்கையான மற்றும் இலகுவாக தகவலை அடையக்கூடியதற்கான அதிகரித்த தேவையை உருவாக்கியுள்ளது. பொருளாதார ரீதியில் வலுப்படுத்தப்பட்ட இளைஞர் உரிய இளம் வயதில் அவர்களது பாலியல் / இனப்பெருக்க சுகாதாரம் மீது தூண்டப்படுகின்றனர் கிராமப் பிரதேசங்களிலிருந்துக வர்த்தக வலயங்களில் வாழ்வதற்கு / வேலை செய்வதற்கு இளைஞர்குடிபெயர்தல் தொழில் வாய்ப்புச் சந்தர்ப்பம், வெளிநாடு மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி என்பன கிராம இளைஞர்களை நவீன வாழ்க்கை / வெளிநாட்டு பழக்க வழக்கங்களுக்குள் உள்ளீர்க்கின்றன. இலங்கையின் சனத்தொகையில் 1/3 இளம் நபர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்னுட்பம் (ICT) பற்றி அறிந்துகொள்ளும் இயலுமையிலுள்ளனர்.
பாலியல், இனப்பெருக்க சுகாதார விடயங்கள் தொடர்பான நம்பிக்கையான தகவலைப் பெறுவதற்கு சுதந்திரமாக அடையக்கூடிய தகவல் தொழினுட்ப அடித்தளமொன்று பாலியல் இனப்பெருக்க சுகாதார விடயங்கள் மீது கவனத்தைச் செலுத்துவதற்கு இணைந்த செலவின்றி அனுமதிக்கின்றது. அடையாளம் மற்றும் தனித்துவத் தன்மை பாதுகாக்கப்படுகின்றது. சமுதாயத்தின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுகின்றது. இலங்கையின் பிரதான சுகாதார முறைமை திருமணமானவார்களுக்கு பாலியல் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதற்கு மட்டுப்படுத்துகின்றது. இதனைத் தெரிவிக்கின்ற இத்தளமானது, சந்தேகம் மற்றும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக தொழில்சார்த வல்லுனர்களால் தெரிவிக்கப்பட வேண்டிய பாலியல், இனப்பெருக்க சுகாதார விடயப்பரப்பு தொடர்பான தகவலை நாடுகின்ற 15 வயதிற்கும் மேற்பட்டவர்ளை அனுமதிப்பதன் மூலம் பயனற்றதாகின்றது. மூன்று மொழியிலும் அமைந்திருக்கின்ற இந்தத் தளம் அனைத்து சமூகங்கள், இனங்களிலுமுள்ளோர் தொடர்பாடல் வசதியுடன்கூடிய இணையமொன்றை காண்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது. பாலியல், இனப்பெருக்க சுகாதார ஆலோசனை/ சேவை தேவைப்படுகின்ற திருமணமானவர்களும் இந்த சேவையை அணுக முடியும். வாழ்வின் அனைத்து நிலையிலுமுள்ள அனைத்து இலங்கையருக்கும் இந்த கருத்திட்டம் கிடைக்கப் பெறுகின்றது.

உருவாக்குவதற்கான காரணம்

பாலியல் இனப்பெருக்க சுகாதார சேவைகளிலுள்ள தொடர்பாடல் இடைவெளி இந்த கருத்திட்டத்தைத் தெரிவிப்பதற்கான அவசர தேவையை ஊக்குவித்துள்ளது. கிடைக்கப் பெறுகின்ற சேவைகள் இளைஞர்களை வசீகரிப்பவை அல்ல. சமூகக் கட்டுப்பாடுகள், தகவல்களின் நம்பிக்கையை சந்தேகப்படுகின்ற பண்டைய தகவல் மூலங்கள் இளைஞர்கள் வெட்கமடைவதைக் காட்டுகின்றன. இலகுவாக அடைய முடிகின்றமை, உண்மையான மற்றும் இரகசியத் தன்மையை உறுதிப்படுத்தும் நம்பிக்கையான தகவல் சேவை தேவைப்பட்டிருந்தது. ஆடை உற்பத்தித் தொழிற்றுறையின் விரைவான விரிவாக்கம் கிராமப் பிரதேசத்திலிருந்து கைத்தொழில் வலயங்களும் அதிகமான இளம் பெண்கள் வாழ்வதற்கு / வேலை செய்வதற்கு குடிபெயர் வதை காட்டுகின்றது. வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நாடுகின்ற இளைஞர்கள் இலங்கையில் முதல்தர வெளிநாட்டு நாணய உளைப்பாளர்களில் ஒருவராவகள். அத்துடன் சுற்றுலாத்துறை வளச்சியூம்கூட மக்களை நவீன வாழ்க்கைப் போக்கிற்கு / வெளிநாட்டு பழக்க வழக்கங்களுக்குள் தள்ளுகின்றது. பொருளாதாரரீதியில் வலுப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்கள் உலக செல்வாக்கு ,ஊடகத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரபல்யமான கலாசாரம், இளம் பராயத்திலேயே அவர்களது பாலியல் செயற்பாடுகளை ஆராய்வதற்கு தாமாகவே பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் மீதான தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கின்றனர் வாழ்க்கைச் சிக்கல்கள் அதிகரிப்பதுடன், பாலியல், இனப்nருக்க சுகாதார விடயங்கள், அனைத்து வயதினரின் வாழ்க்கையின் தரத்தினைத் தீர்மானிக்கின்ற பிரதான காரணியாக வந்துள்ளது. தகவலளிக்கப்பட்ட தீர்மானத்தை எடுப்பதற்கு சரியான நேரத்தில், சரியான தகவலை அடைதல் அதிகாரபூர்வமானது. இன்று விரிர்படுத்தப்பட்ட குடும்ப வாழ்க்கை பாரம்பரியங்கள் அருகியுள்ளன என்பதுடன், இளைஞர்கள் பாலியல் இனப்பெருக்க சுகாதார விடயங்களுக்கு முகம் கொடுக்கையில் மூலங்கள் எதுவு மின்றி அவர்கள் தனித்துவிடப்படுவதாகப் பார்க்கின்றனர். உதாரணமாக, பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவு ஏற்படும் வரை அவசர கருத்தடை மாத்திரை பற்றி நபரொருவர் அக்கறையற்று இருக்கக்கூடும். மற்றைய வரையறைக்குட்பட்ட சமூகக் குழுக்கள் அதாவது பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தலுக்குள்ளாகி பாதிப்படைந்தவர்கள் வெளியே கூறுவதற்கு, கேள்வி கேட்பதற்கு அஞ்சுகின்றனர். அத்துடன் பாதுகாப்பாக, அணுகக்கூடிய முறையில், செலவின்றி பாலியல் இனப்பெருக்க சுகாதார தகவல் / உசாவுகையை வழங்குகின்ற அர்ப்பணிப்புள்ள பொறிமுறை /சேவை இல்லை. இந்த கருத்திட்டத்தின் நோக்கம், தீமையான தீர்வுகளுக்குச் செல்லாத பாதுகாப்பான, நம்பிக்கையான இணையமொன்றில் இளைஞர்களினால் / அவர்களின் நண்பர்களினால் முகம் கொடுக்கப்படுகின்ற பாலியல்
இனப்பெருக்க சுகாதார விடயங்களில் ஈடுபடுவதற்கு இளைஞர்களை ஊக்குவிப்பதாகும். பாலியல், இனப்பொருக்க சுகாதார விடயங்கள் பற்றிய கலந்துரையாடலைச் சூழவுள்ள தனிநப, கலாசார, உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற கருத்திட்டத்தினால் இரகசியத்தன்மை மற்றும் தகவல் வெளியிடாமை உறுதிப்படுத்தப்படுகின்றது.

நடைமுறைகள் பற்றிய விபரிப்பு :

ஸ்ரீலங்கா குடும்பத் திட்டச் சங்கம் (தற்போது எவ்.பீ.எ ஸ்ரீ லங்கா) 1953 ஆம் ஆண்டில் தொழிற்பட ஆரம்பித்த அரசாங்கம் சாராத நிறுவனமாகும்.உத்தரவாதத்தால் மட்டுப்படுத்தப் பட்ட கம்பனி, இலங்கை சமூக சேவைகள் அமைச்சின் இலாபம் ஈட்டாத நிறுவனம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா குடும்பத் திட்டமிடல் சங்கம், சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் கூட்டமைப்பின் நம்பத்தகு அங்கத்தவராகும். தாபனமானது, பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்கள், மருந்தகங்களின் வலைப்பின்னலினூடாக நாடு முழுவதிலுமுள்ள கருத்தடை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற அதனது சமூக சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தினூடாக நன்கொடையாளர்களினால் நிதியிடப்பட்டு ஆதரவளிக்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா குடும்பத் திட்டச் சங்கம், இனப்பெருக்க சுகாதார நலன், கல்வி, தகவல் மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலையிலிருந்தும் இலங்கையருக்கு தீர்வுகள் பற்றிய எண்ணக்கருக்களை கொண்டுவருவதன் வழியைக் கண்டுபிடிப்பாளராக பல ஆண்டுகளாக முன்னோடியான பங்கினை வகித்துள்ளது. ஸ்ரீ லங்கா குடும்பத் திட்டமிடல் சங்கம் இனப்பொருக்க சுகாதாரம் தொடர்பில் தகவல் மற்றும் சேவைகளை வழங்குவதில் அரச முயற்சிகளை அதிகரிப்பதற்காக அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது. சமூகத்தின் இன்றைய தேவைகளை வெளிப்படுத்துவதனைக் கொண்டிருந்து சமூகத்தில் வரையறைக்குட் டுத்தப்பட்ட பிரி வுகளின் தேவைகள் மீது கவனத்தைச் செலுத்தி நாடு முழுவதிலும் முழுமையான பாலியல், இனப்பெருக்க சுகாதார சேவைகளை குடும்பத் திட்டமிடல் சங்கம் வழங்குகின்றது. இதனது கடந்த கால பாடங்கள் மற்றும் வெற்றிகரமான அனுபவங் களிலிருந்து ய்யக்கூடிய ஆற்றல்களைக் கவனத்தில்கொண்டு எதிர் காலத்திற்கான குடும்பத்திட்டமிடல் சங்கத்தின் தொலைநோக்கு, கட்டுப்பாட்டுடனான செயற்பாடுகள், புதிய அடிப்படையை உருவாக்கல், நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் பாலியல், இனப்பெருக்க சுகாதார சேவைகளைத் தேவைப்படுகின்றவர்களை அடைதல் என்பதாகும்.
இலங்கையரின் மனநிலையைப் புரிந்துகொண்டு, குடும்பத்திட்டமிடல் சங்கம் பாலியல், இனப்பெருக்க சுகாதார ஆதரவு மற்றும் சேவைகளின் தேவைகளில் மக்களின் நம்பிக்கை யுள்ள நண்பனாகவும், பங்காளியாகவும் தன்னை நிலைநிறுத்தியிருக்கின்றது. கட்டுப்பாட்டு டனான செயற்பாடு பாலியல், இனவிருத்தி சுகாதார உற்பத்திப் பொருட்கள், சேவைகள், ஆதரவு மற்றும் கவனிப்பு தேவைப்படுகின்றவா;களை அடைவதில் சரியான இடத்தில், சரியான நேரத்தில் குடுப்பத் திட்டச்சங்கம் தன்னை நிலைநிறுத்தியிருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றது. பாதிப்படையக்கூடிய, வரையறுக்குட்படுத்தப்பட்டிருக்கின்ற குழுக்கள், உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்கள், வயோதிபா;கள் மற்றும் எச்.ஐ.விடன் வாழ்கின்ற மக்களை அடைவதில் குடும்பத் திட்டமிடல் சங்கம் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் முறைமையை கருப்பொருளாக்குவதற்குள் இருக்கின்ற இடைவெளிகளை இணைப்பதன் மூலம் புதிய தளத்தை உருவாக்குவதில் வெற்றியடைந்துள்ளது. விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு புதிய தொழில்னுட்பம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பாலியல், இனப்பெருக்க சுகாதார விடயங்கள், பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் சாதகமான உரையாடலுக்கான இடமொன்றை உருவாக்குதல். குடும்பத் திட்டமிடல் சங்கம், ஐக்கிய நாடுகளின் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளினால் எதிhபாக்கப்பட்டவாறு அனைவருக்கும் பாலியல், இனவிருத்தி சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்திய பொதுவான இலக்கினை நோக்கிச் செல்வதில் அதனது நண்பர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற செயற்பாட்டாளர் ஒன்றாக வேலை ஆற்றி நம்பிக்கையைக் கட்டியெழுப்பவதில் வெற்றிகண்டுள்ளது.

பங்குதாரர்கள் :

நிதியிடல்
IPPF/SARO
ICTA
UNFPA

தகவல் தொழில்னுட்ப கம்பனி

Ceylon Linux
Ben World Wide

இதுவரை எய்தப்பட்ட சாதனைகள்:

2009 நவம்பா; 6 ஆம் திகதி சினமன் கிறாண்டில் நடைபெற்ற இ- சுகாதாரம் மற்றும் சுற்றாடல் வகைப்பட்டிற்கான The National Best e- Content Award 2009 ( e- Swabhimani) வெற்றியாளH.
2010 ஒக்டோபரில் இலாபம் ஈட்டாத வகைப்பாட்டில் ஆண்டுக்கான சிறந்த இணையத்தள தங்க விருது வெற்றியாளர்.
ஏச்.ஐ.வி விழிப்புணர்வு மீது ஐ.சி.சி பங்குடமை

நிலைத்திருத்தல்:

2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கூட்டுறவு சமூகப் பொறுப்பு கருத்திட்டமாக ஸ்ரீ லங்கா குடும்பத் திட்டச் சங்க வருடாந்த நிகழ்சித்திட்டப் பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.