கருத்தரிக்க முன் ஆயத்தம்

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன்ஆயத்தம்)

பிறப்புரிமை ஆலோசனை

பிறப்புரிமை ஆலோசனை வழங்குதல்(Genetic Counseling)

இது ஏற்கனவே ஏதாவது பிறப்புரிமை நோயுடைய (டவுன் நோய், தலசீமியா) ஒருவருக்கு மிகவும் உகந்தது.

டவுன் நோய் (Down syndrome)

என்றால் என்ன?

இது மூக்கூட்டு நிறமூர்த்தங்களால் ஏற்படும் ஒரு நிலையாகும். அதாவது 21ம் நிறமூர்த்தத்தில் மூன்றாம் நிறமூர்த்தம் ஒன்று காணப்படும்.

யார் பாதிக்கப்படுவர்?
இது வயது கூடிய (35 வயதிற்கு மேற்பட்ட) பெண்களில் ஏற்படுவதற்கே சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. என்னும், அதிகப்படியான பெண்கள், இளம் வயதிலேயே பிள்ளைகள் பெறுவதனால், அதிகமான டவுண் குளந்தைகள் இளம் வயது பெண்களில் காணப்படும்.

ஏற்னவே தாய்க்கோ அல்லது அவரின் குடும்பத்திற்கோ ஒரு அங்கவீனமுற்ற குழந்தை இருப்பின் தற்போதய பிரசவத்தில் அவ்வாறான குழந்தை பெற சாத்திய கூறுகள் அதிகம். இது அனைத்து குலங்களையும் நிறங்களையும் பாதிக்கலாம்.

முன்கூட்டிய கண்டுபிடித்தல்

டவண் நோயின் போது, ஏற்படும் பிறப்புரிமை மாற்றங்களை மாற்றமுடியாது. எனினும், அபாயத்திற்குள்ளான குழந்தைகளை முன்கூட்டி கண்டுபிடிக்கலாம்.
இதற்காக:

  • அல்டிரா ஸ்வுண்ட் ஸ்கேன் – இது கர்ப்ப காலத்தில் 10-14 கிழமைகளில் செய்யப்படும்.
  • குருதி பரிசோதனைகள் – இதன் போது மூன்று இரசாயன பதார்த்தங்கள் பரிசோதிக்கப்படும். இவை, பீடா hca, அல்பா பீடோ புரதம், ஈஸ்டிரைனேல். இது 15-22 கிழமைகள் வரை செய்யப்படும்.

இப்பரிசோதனைகள் சாத்தியக்கூறு கூடிய குழந்தைகளை கண்டுபிடிப்பதே இந்த பரிசோதனையின் நோக்கமாகும். இது குழந்தைக்கு நிச்சயமாக டவுண் என்பதை கூறாது.

டவுண் நோய் ஏற்பட அதிக வாய்ப்புடையோருக்கு, மேலும் நில பரிசோதனைகள் வழங்கப்படும். இது அமினியன் பாய்பொருளை பரிசோதிப்பது, அல்லது கோரியன் முலைகளை சோதிப்பது என்பவையாகும்.

டவுண் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இலங்கையிலுள்ள தற்போதைய சட்டங்களின்படி கருச்சதைவு செய்து கொள்ள முடியாது.

தலசீமியா (Thalassemia)

என்றால் என்ன?
இது குருதியில் ஏற்படும் பிறப்புரிமை நோயாகும். இதன் போது ஈமோகுளோபின் எனும் ஒட்சிசனை காவும் நிறக்கூறில் ஏற்படும் பிரச்சனை ஆகும்.

இரண்டு பிரதான தலசீமியா காணப்படும்

  1. அல்பா தலசீமியா
  2. பீடா தலசீமியா- 3 வகைப்படும்
  • சிறு தலசீமியா – பிறப்புரிமை மாற்றத்தை உடலில் கொண்டிருந்த போதிலும், நோய் அறிகுறிகள் காட்டப்பட மாட்டாது
  • நடுநிலை தலசீமியா – இதனால், பந்தமான குருதிச்கை ஏற்படலாம். ஏனவே, குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.
  • பெரும் தலசீமியா – இது கடுமையான நோய் ஆகும். இதன் போது கடுமையான குருதிச்சோகை ஏற்கடலாம். தொடர் குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.

எவ்வாறு ஏற்படுகிறது?

ஈமோகுளோபின் உருவாகும் பிறப்புரிமை அலகுகளின் குறைபாட்டாலே, இது ஏற்படும். எனவே, இவர்களுக்கு குறைவான அளவு ஈமோக்குளோபின் செங்குருதி சிறு துணிக்கைகள் காணப்படும்.

தலசீமியா பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படும். இது இரத்த உறவுகளிடையே திருமணம் நடந்தால், ஏற்படும் சாத்தியகூறுகள் அதிகரிக்கும். இதனை காவுவோருடைய அறிகுறிகள் காணப்படாது. எனினும், இவர் இன்னொரு காவுவோரை திருமணம் முடித்தால் அவருக்கு நோயுள்ள ஒரு குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.

இந்த நோய் வாழ்நாள் முழுவதும் காணப்படும் என்பதாலும், சரியான சிகிச்சை முறை இல்லை என்பதாலும், இது குழந்தைக்கும் பெற்றோருக்கும் உளரீதியாக பாதிப்பை ஏறடபடுத்தக்கூடிய நோய் ஆகும்.

நோயை பற்றி சரியாக அறிந்து கொள்ளுதல், அதன் சிகிச்சை முறைகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் பாதிப்பினை குறைக்கலாம்.

இலங்கையில் தேசிய தலசீமியா நிலையம் – நோயாளிகளுக்கு உதவி வழங்குகிறது. இவர்களின் செயற்பணி – தலசீமியா நோய் மற்றும் தடுப்பு மீளமைப்பு ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு
தேசிய தலசீமியா நிலையம்-போதனை வைத்தியசாலை, குருணாகல்
தொலைபேசி- 0094372222262